Header Ads

Breaking News

பாவமன்னிப்பு யாருக்கு ???




பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல் குர்ஆன் 4:4)
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யும் வகையில் அவர்களிடமிருந்து எதையும் அநியாயமாக கேட்டு வாங்காதீர்கள்.




பாவமன்னிப்பு யாருக்கு ???
  
1)        மனிதன் தன் செய்த தவறை உணர வேண்டும்,
2)        தான் செய்த தவருக்காக வருந்த வேண்டும்,
3)        தான் செய்த தவறுக்காக அல்லஹ்விடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்,
4)        மீண்டும் அதே தவறை செய்யாமலிருக்க வேண்டும்,
இது தான் (தவ்பா செய்வதின்) பாவ மன்னிப்பு தேடுவதின் நிபந்தனை ->>>> மேலும்    
           மனிதர்களுக்கு அநியாயம் செய்து விட்டு அபகரித்து விட்டு அவமானப்படுத்திவிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் அது நடவாது >>> மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிக்காமல் விட மாட்டான். செய்த நன்மைகளை இழக்க வேண்டியிருக்கும் அல்லது அநீதி இழைக்கப்பட்டவரின் பாவச்சுமையை தான் சுமக்க வேண்டியிருக்கும். இத்தகையவர்களை முப்லிஸ்” பெரும் நஷ்டவளிகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          
 எனவே இவ்வுலகிலேயே மனிதர்களில் யாருக்கேனும் அநியாயம் செய்திருந்தால் அபகரித்து இருந்தால் திருப்பி கொடுக்க வேண்டும் – பரிகாரம் செய்ய வேண்டும் – அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – இருவரும் சமாதானம் ஆன பிறகு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கிறான்.

அல்லாஹ்விடன் அதிகமாக பிரார்த்திப்போம்.
                            பாவமற்ற விஷயங்களிலும்உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம்(பிரார்த்தித்து) கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 10709


No comments

தங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!